மிஷ்கின் பேசியது தவறு! கொந்தளித்த திமுக Ex எம்பி! பதிலடி கொடுத்த நாம் தமிழர் கட்சி! - Seithipunal
Seithipunal


சென்னையில் நடைபெற்ற பாட்டில் ராதா திரைப்பட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இயக்குனர் மிஷ்கின், மிக ஆபாசமான முறையில்  பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஒரு வார்த்தைக்கு இரண்டு கெட்ட வார்த்தைகளை பயன்படுத்தி மிஷ்கின் பேசி இருந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

இந்த காணொளியை பார்த்த திமுகவின் முன்னாள் எம்பி செந்தில்குமார், "மிஷ்கின் மேடையில் பேசியது மிகவும் அநாகரிகமான அருவருப்பான பேச்சு!

சிறிதளவும் நாகரிகமின்றி நான்காம் த(ரை)ர பேச்சாளரை போல் பேசியது மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்கது!

இதை முன்மாதிரியாக யாரும் பின்பற்றாதவாரு அவருக்கு கடின எச்சரிக்கை மற்றும் அறிவுறுத்தலை உரியவர்கள் வழங்க வேண்டும்" என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், திமுக முன்னாள் எம்பி செந்தில் குமாருக்கு, நாம் தமிழர் கட்சியை சேர்ந்த இடும்பாவனம் கார்த்திக் பதில் கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார். 

அதில், "சிவாஜி கிருஷ்ணமூர்த்தின்னு ஒருத்தரை உங்க கட்சில வச்சு இருக்கீங்களே.. அவருக்கு இது பொருந்தாதுங்களா மருத்துவரே?" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK ex MP vs NTK Idumbavanam karthik


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->