`'டோமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்' படத்தின் `Ee Rathri' பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகியுள்ளது..! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் கௌதம் வாசுதேவ் மேனன். தற்பொழுது டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ் ' என்ற படத்தை இயக்கி உள்ளார்.

இந்த படத்தில் நடிகர் மம்மூட்டி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளதோடு, படத்தை தயாரித்தும் உள்ளார். இந்த படத்தில் மம்மூட்டியுடன் இணைந்து சுஷ்மிதா பட், கோகுல் சுரேஷ், விஜி வெங்கடேஷ், வினித், விஜய் பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு தர்புகா சிவா இசையமைக்க, விஷ்ணு ஆர் தேவ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆண்டனி எடிட்டிங் பணிகளை செய்துள்ளார். 

இந்த திரைப்படம் வரும் ஜனவரி 23 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில்,  தற்பொழுது படத்தின் பாடலான ஈ ராத்திரி பாடலின் லிரிக் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

https://www.youtube.com/watch?v=S0SHop0GhWw


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The first single Ee Rathri from the film Dominic and the Ladies Purse has been released


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->