தெலுங்கில் அறிமுகம்..  நித்தின் படத்தின் இணையும் 'காந்தாரா' பட நடிகை.! - Seithipunal
Seithipunal


நடிகை சப்தமி கவுடா, நித்தின் படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமாக இருக்கிறார். வேணு ஸ்ரீராம் இயக்கும்  இப்படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் ரிஷப் செட்டி இயக்கி நடித்திருந்த 'காந்தாரா'திரைப்படம் கடந்த 2022-ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இப்படம் கர்நாடக மாநிலத்தின் வனப்பகுதியில் வசிக்கும் மக்கள் தெய்வமாக வணங்கும் 'பஞ்சுருளி' என்ற காவல் தெய்வத்தை மையமாக வைத்து உருவாகி இருந்தது. இந்த திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.இந்த படத்தில் கதாநாயகியாக சப்தமி கவுடா நடித்திருந்தனர்.

தற்போது 'காந்தாரா படம் 2-ம் பாகம் உருவாகி வருகிறது. இந்தநிலையில் நடிகை சப்தமி கவுடா நித்தின் நடிக்கும் தம்முடு படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமாக இருக்கிறார். தற்போது இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் படமாக்கப்பட்டுவருகின்றன என தகவல்வெளியாகியுள்ளது.

இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பேனரில் தில் ராஜு தயாரிக்கும் இப்படத்திற்கு காந்தார புகழ் அஜனீஷ் லோக்நாத் இசையமைத்து வருகிறார்.  வேணு ஸ்ரீராம் இயக்கும்  இப்படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Debut in Telugu  Kantara actress joins Nith s film


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->