சூடான சிக்கனால் வெந்துபோன குழந்தையின் கால் - அதிரடி உத்தரவிட்ட நீதிமன்றம்.! - Seithipunal
Seithipunal


சூடான சிக்கனால் வெந்துபோன குழந்தையின் கால் - அதிரடி உத்தரவிட்ட நீதிமன்றம்.!

அமெரிக்கா நாட்டில் புளோரிடா மாகாணத்தில் உள்ள மெக்டொனால்டு உணவகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, பிலானா-ஹம்பர்டோ தம்பதியர் சிக்கன் நக்கெட்ஸ் பார்சல் வாங்கி உள்ளனர். இந்தப் பார்சலை அவர்கள் வந்த காரின் இருக்கையில் வைத்துள்ளனர். அதில் ஒரு சிக்கன் துண்டு இருக்கையில் சிக்கியிருந்தது. 

அதன்மீது அந்தத் தம்பதியினரின் நான்கு வயது குழந்தையின் கால் பட்டதால் குழந்தையின் கால் வெந்துள்ளது. இதையடுத்து அந்தத்தம்பதியினர் குழந்தையை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சிகிச்சை அளித்தனர். 

இதனால், ஆத்திரமடைந்த அவர்கள் சூடான சிக்கன் நக்கெட்டை சரியாக பார்சல் செய்து வழங்காத மெக்டொனால்டு நிறுவனத்திடம் தங்கள் குழந்தை பட்ட அவஸ்தைக்கு நிவாரணம் கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். 

கடந்த நான்கு ஆண்டுகளாக நீடித்த இந்த வழக்கின் வாதங்கள் சமீபத்தில் நிறைவடைந்தது. அதன் முடிவில், மெக்டொனால்டு நிறுவனம், பாக்கெட்டில் சரியான எச்சரிக்கை வாசகத்தை அச்சிடாததும், பாதுகாப்பற்ற முறையில் உணவை கொடுத்ததும் குழந்தையின் காயத்திற்கு காரணம் என்பது தெரியவந்தது. 

இதனை பதிவு செய்துகொண்ட நீதிபதி பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு 8 லட்சம் டாலர் இழப்பீடாக வழங்க வேண்டும் என்று மெக்டொனால்டு நிறுவனத்திற்கு உத்தரவிட்டார். மேலும், இனி நக்கெட்சை பாதுகாப்பாக வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

eight lakhs compensation of girl leg burned issue in america


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->