தங்கம்... எந்த நாட்டில் அதிகமாக இருக்கிறது தெரியுமா? - Seithipunal
Seithipunal


தங்கம் உலகத்தின் மிகவும் மதிப்புள்ள உலோகங்களில் ஒன்றாக இருக்கிறது. மத்திய வங்கிகள் கூட மஞ்சள் உலோகத்தை அதிகப்படியாக வாங்கி வருகிறது. மேலும் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருகிறது. அதுமட்டுமின்றி, வேறு எந்தச் சொத்து வகுப்பாலும் தங்கத்தைப் பாதுகாப்பான முதலீடாகக் கூற முடியாது.

மேலும்,ஒரு நாடு வைத்திருக்கும் தங்கத்தின் அளவுதான் அந்த நாட்டின் பொருளாதாரத்தின் நிலையைக் குறிக்கும். உலகத்தில் அதிகத் தங்க இருப்பு வைத்திருக்கும் நாடுகள் பற்றிய தகவல்களைக் காணலாம்.

அமெரிக்கா:

உலகிலேயே அதிகத் தங்க இருப்பு வைத்திருக்கும் நாடானது அமெரிக்கா. இங்கு தான் 8,133.46 டன் மிகப்பெரிய தாது பொருட்கள் உள்ளது. அமெரிக்க டாலரின் மதிப்பு வலுவடைவதற்கு இதுவே முக்கிய காரணமாகும். ஏனென்றால், இது உலகின் தங்க இருப்பில் 25 % ஆகும்.

ஜெர்மனி : இரண்டாவதாக உலகிலேயே தங்க இருப்பு வைத்திருக்கும் நாடு ஜெர்மனி ஆகும். இந்த நாடு 3,351.53 டன் தங்கத்தை இருப்பில் வைத்திருக்கிறது. ஐரோப்பிய நாடுகளில் அதிகத் தங்க வைத்திருக்கும் நாடாக இந்த நாடு திகழ்கிறது. மேலும் பெரும்பாலாக நியூயார்க் மற்றும் லண்டனில் வைக்கப்பட்டுள்ளது.

இத்தாலி: மூன்றாவது நாடாக, அதிகத் தங்கம் கொண்ட நாடு இத்தாலி. இந்த நாடு 2,451.84 ton தங்க இருப்பை வைத்துள்ளது. இந்த நாடு பல பொருளாதாரப் பிரச்சனைகளை எதிர்க் கொண்டாலும், தங்க இருப்பைக் காத்துக் கொள்வதில் கவனமாக இருக்கிறது. மேலும் இந்த நாட்டில் பெரும்பாலான தங்க இருப்புகள் இத்தாலிய வங்கியில் சேமிக்கப்படுகின்றன.

பிரான்ஸ் : நான்காவது நாடாக இந்நாட்டில் 2,436.94 டன் தங்க இருப்பு உள்ளது . மேலும் பல சகாப்தங்களாகத் தங்க இருப்புகளை அதிகரித்து வரும் நாடு இது. பொருளாதாரத்தின் தன்மையைப் பராமரிப்பதில் தங்கம் முக்கிய பங்கு வகிக்கிறது. அதுமட்டுமின்றி, வங்கிகளும் தங்கத்தைச் சேமித்து வருகின்றன.

ரஷ்யா: இந்த நாட்டில் 2,335.5 டன் தங்கத்தை வைத்துள்ளது. மேலும் சமீபத்தில் தான் ரஷ்ய நாடு அதிக அளவிலான தங்கத்தை வாங்கி வருகிறது. அமெரிக்க டாலரைச் சார்ந்து இருப்பதைத் தவிர்த்துக் கொண்டு,தங்கத்தில் பங்கை அதிகரிப்பதே அங்கு ஏற்றுக் கொள்ளப்பட்ட கொள்கையாகும். இந்த நாட்டில் பெரும்பாலான தங்கம்,மாஸ்கோ மற்றும் செயின்ட் பீட்டர்ஸ் பார்க்கில் சேமிக்கப்படுகின்றன.

சீனா: இந்த நாட்டில் 2,191.53 டன் தங்கத்தைச் சேமித்து உள்ளது. தங்கத்தின் உற்பத்தியாளராகத் திகழ்கிற சீன நாடு, பொருளாதாரத்தில் இரண்டாவது பெரிய நாடாகத் திகழ்கிறது. மேலும் தற்போது தங்க இருப்பை அதிகரிப்பதில் கவனம் செலுத்தி வருகிறது.

ஸ்விட்சர்லாந்து : இந்த நாடு அழகிய இயற்கைக் காட்சிகளுக்கு பேர்ப் போனது என்பதை அனைவரும் அறிந்தவை. மேலும், இந்நாடு 1,040.00 ton தங்கத்தைச் சுவிஸ் தேசிய வங்கியால் சேமித்து வருகிறது.

இந்தியா: நம் நாடான இந்தியாவில், 853.78 டன் தங்கத்தை வைத்துள்ளது. நாம் தங்கத்தைக் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகப் பார்க்கிறோம். மேலும் இந்தியாவில் வீடுகளிலும், கோயில்களிலும் மிகப்பெரிய தங்க இருப்புகள் உள்ளன. 

ஆனால், அவை அதிகாரப்பூர்வமாகப் புள்ளி விபரங்களில் சேர்க்கப்பட வில்லை. மேலும், நம் நாட்டில் தங்க இருப்பு இந்திய ரிசர்வ் வங்கியால் நிர்வகிக்கப்படுகிறது. இதே நேரத்தில், அண்டை நாடான பாகிஸ்தான் 64.74 ton தங்கத்தைக் கொண்டு பட்டியலில் 46 வது இடத்தில் உள்ளன.

இதைத்தொடர்ந்து ஜப்பான் 845.97 ton தங்கத்துடன் ஒன்பதாவது இடத்திலும், நெதர்லாந்து 612.45 ton தங்க இருப்புடன் பத்தாவது இடத்திலும் உள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Gold Do you know which country has the most


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->