அசத்தல்!!!கார்த்தி நடித்த சர்தார் 2 பட teaser !!!
Karthi starrer Sardaar 2 teaser
'சர்தார்' திரைப்படம் நடிகர் கார்த்தி மற்றும் இயக்குநர் பி.எஸ். மித்ரன் கூட்டணியில் வெளியாகி பெரும் வெற்றி பெற்றது . இந்தப் படத்தின் வெளியீட்டின் போதே இதன் இரண்டாம் பாகம் உருவாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

சர்தார் திரைப்படம் வெற்றி பெற்றதையடுத்து, இந்தப் படத்தின் 2 டாம் பாகம் வேக வேகமாக உருவானது.இப்படத்தில் நடிகர் எஸ்.ஜே. சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், ரஜிஷா விஜயன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
சர்தார் 2 படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்ற நிலையில், படத்திற்கான பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் காலையில் வெளியாகி கவனம் ஈர்த்தன.
இதைத்தொடர்ந்து இப்படத்தின் முன்னோட்ட வீடியோவை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
English Summary
Karthi starrer Sardaar 2 teaser