முடிச்சுவிட்டிங்க போங்க!!! 3 நிமிடக் காட்சியை நீக்கியது EMPURAAN படக்குழு..!!!
EMPURAAN team deleted 3 minute scene
பிரபல நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் உலகம் முழுவதும் வெளியானது 'L2 எம்புரான்'. கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான படம் 'லூசிஃபர்' படத்தின் 2 ம் பாகம் இதுவாகும்.

இத்திரைப்படம் உலகளவில் வெளியான 2 நாளில் ரூ.100 கோடி வசூலித்து சாதனை படைத்தது.l2 எம்புரான் படத்தின் வில்லன் காதாபாத்திற்கு பால்ராஜ் படேல் என்கிற பாபா பஜ்ரங்கி என்று பெயரிடப்பட்டது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இப்படத்தில் குஜராத் கலவரங்களை குறித்து காட்சிகள் இருப்பதால் இதை இந்துத்துவ அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதனால் மோகன்லால் மன்னிப்பு கேட்டு பதிவிட்டிருந்தார்.இந்நிலையில், எம்புரான் பட சர்ச்சை தொடர்பாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் ஆதரவு கொடுத்து பேசியுள்ளார்.
இதைத்தொடர்ந்து படத்தின் 3 நிமிட காட்சியை படக்குழு தற்பொழுது நீக்கியுள்ளது.இனி இதனால் சர்ச்சை எதுவும் வராது எனப் படக்குழுவாள் நம்பப்படுகிறது.
English Summary
EMPURAAN team deleted 3 minute scene