பிரியங்கா காந்தியின் வாகனத்தை வழிமறித்த யூடியூபர் கைது!
Wayanad malappuram Priyanka Gandhi youtuber
கேரளாவில், வயநாடு எம்.பி. பிரியங்கா காந்தியின் பாதுகாப்பு வாகனத்தை வழிமறித்த யூடியூபர் அனீஷ் ஆபிரஹாம் கைது செய்யப்பட்டுள்ளார்.
மலப்புரம் மாவட்டத்தில் நேற்று இரவு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட பிரியங்கா காந்தி, இரவு 9.30 மணியளவில் கொச்சி விமான நிலையத்திற்குச் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, மன்னுத்தி பைபாஸ் சந்திப்பில், அவரது பாதுகாப்பு வாகனம் தொடர்ந்து ஹாரன் அடித்ததால், யூடியூபர் அனீஷ் ஆபிரஹாம் தனது காரை நிறுத்தி அதை மறித்ததாக கூறப்படுகிறது.
காவல்துறையினர் அவரைக் விலகச் சொல்லியபோது, அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனையடுத்து, பாதுகாப்பு வாகனத்திற்குத் தடை ஏற்படுத்தியது, உயிருக்கு ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டியது, காவல்துறையினரிடம் அத்துமீறியது என்பன உள்ளிட்ட பிரிவுகளில் அவர்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அதன் பேரில், அனீஷ் ஆபிரஹாம் கைது செய்யப்பட்டு, அவரது கார் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர், அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து காங்கிரஸ் கட்சி, பிரியங்கா காந்தியின் பாதுகாப்பில் அலட்சியம் காட்டப்பட்டதாக கண்டனம் தெரிவித்துள்ளது.
English Summary
Wayanad malappuram Priyanka Gandhi youtuber