குரூப்-1 தேர்வு நாளை அறிவிப்பு! முக்கிய உதவி ஆணையர் பதவி சேர்ப்பு! - Seithipunal
Seithipunal


டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை (ஏப்ரல் 1) வெளியிடப்படுகிறது. இந்த முறை, வருவாய் கோட்டாட்சியர் (துணை ஆட்சியர்), டிஎஸ்பி, கூட்டுறவு துணை பதிவாளர் உள்ளிட்ட உயர் பதவிகளுடன், முதன்முறையாக தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் பணியும் சேர்க்கப்படுகிறது.

குரூப்-1 தேர்வு மூன்று நிலைகளாக நடைபெறும் – முதன்முதல் தேர்வு, மெயின் தேர்வு, நேர்முகத் தேர்வு. பட்டதாரிகள் இந்த தேர்வை எழுதலாம். வயது வரம்பு பொதுப்பிரிவினருக்கு 34 மற்றும் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 39 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தேர்வு மற்றும் காலஅட்டவணை டிஎன்பிஎஸ்சி 2025 தேர்வு அட்டவணைப்படி, அறிவிப்பு – ஏப்ரல் 1, முதன்முதல் தேர்வு – ஜூன் 15

தொழிலாளர் உதவி ஆணையர் தேர்வு – புதிய இணைப்பு:

முன்னதாக, தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் பதவிக்கான தேர்வு தனியாக நடத்தப்பட்டு வந்தது. ஆனால் 2024 ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்ட அரசாணையின்படி, இப்போது அந்த தேர்வு குரூப்-1 தேர்வுடன் இணைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், குரூப்-1 தேர்வில் மேலும் ஒரு முக்கிய பதவி சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TNPSC Group 1 Exam date announce 2025


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->