இந்திய ரூபாயின் மதிப்பு கிடுகிடுவென உயர்வு.. பொருளாதார நிபுணர்கள் நம்பிக்கை.! - Seithipunal
Seithipunal


உக்ரைன் போர் நடந்ததன் காரணமாக உலகப் பொருளாதாரம் மோசமான நிலைக்கு சென்றது. இதனால், இந்திய பங்கு சந்தைகளின் அனைத்து செயல்பாடுகளும் தொடர்ந்து சரிவை சந்தித்தன. இருப்பினும், இந்த ஜூலை மாதத்தில், மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 7.76 சதவீதம் மற்றும் தேசிய பங்கு சந்தையின் நிப்டி 7.91 சதவீதம் அதிகரித்து இருக்கின்றது. 

கடந்த வெள்ளிக்கிழமையில், மட்டும் 712 புள்ளிகள் அதிகரித்து, 57,570ஆக சென்செக்ஸ் இருக்கின்றது. மேலும், 228 புள்ளிகள் நிப்டி அதிகரித்து, 17,158ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஓராண்டில் இது தான் உச்ச நிலவரம். வெள்ளிக்கிழமை 6,300 கோடி ரூபாய் அளவுக்கு அன்னிய முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்கி இருக்கின்றனர். 

2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கு பின் அவர்கள் பங்குகளை முதல்முறையாக வாங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்திய ரூபாயின் மதிப்பு அமெரிக்க டாலருக்கு எதிராக கடந்த வெள்ளியன்று 50 பைசா அதிகரித்து ரூ. 79.25 ரூபாயாக இருக்கின்றது. கடந்த புதன்கிழமையில் அமெரிக்க ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதத்தை 0.75 சதவீதம் உயர்த்தி, 2.5 சதவீதமாக அதிகரித்தும், இந்திய ரூபாயின் மதிப்பு வலுவடைந்துள்ளது.

கடந்த ஜூன் மாதத்தில் சேவை நிறுவனங்களுக்கு கொடுக்கப்பட்ட கடன்களின் அளவு 12.8 சதவீதமும், தொழில்துறை நிறுவனங்களுக்கு கொடுக்கப்பட்ட கடன்களின் அளவு 9.5 சதவீதமும்,  அதிகரித்து இருக்கின்றது. இந்திய பொருளாதாரத்தின் அடித்தளம் எந்த அளவிற்கு வலுவாக இருக்கிறது என்பதை இவை உணர்த்துவதாக துறை சார் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Indian Rupee value increased


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->