மத்திய அரசை தொடர்ந்து பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரி குறைப்பு.. முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு..!! - Seithipunal
Seithipunal


இந்தியா முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்து வந்தது. இதனால் அத்தியாவசியப் பொருட்களான காய்கறிகள், மளிகை பொருட்கள் போன்றவற்றின் விலைகள் உயர தொடங்கியது. இந்த விலை உயர்வால் பொதுமக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகின்றனர்.

இதனிடையே பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வில் இருந்து மக்கள் நிவாரணம் அளிக்கும் வகையில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான உற்பத்தி வரியை லிட்டருக்கு ரூ. 8 குறைந்தும், டீசல் மீதான உற்பத்தி வரியை லிட்டருக்கு ரூ. 6  குறைத்து மத்திய அரசு நேற்று முன்தினம் அறிவிப்பை வெளியிட்டது. 

இதைத்தொடர்ந்து, முதல் மாநிலமாக கேரளா அரசு பெட்ரோல் மீதான வரியை ரூ. 2.41-ம், டீசல் மீதான வாட் வரியை ரூ. 1.16-ம் குறைப்பதாக அறிவித்தது. கேரளாவை தொடர்ந்து ராஜஸ்தான் அரசு பெட்ரோல் மீதான வரியை ரூ. 2.48-ம், டீசல் வரியை ரூ. 1.16-ம் குறைத்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

இந்நிலையில், கேரளா, ராஜஸ்தான் மாநிலங்களில் தொடர்ந்து மகாராஷ்டிர மாநில அரசும் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை குறைத்துள்ளது. பெட்ரோல் மீதான வரியை ரூ. 2.08-ம், டீசல் மீதான வாட் வரியை ரூ. 1.44-ம் குறைத்து உத்தரவிட்டுள்ளது. இந்த மாநிலங்களில் தொடர்ந்து தமிழகத்திலும் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரியை தமிழக அரசு குறைக்குமா.? என பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

maharashra govt reduction vat on petrol diesel


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->