அம்பானிக்கு ஏற்பட்ட சோகம் - ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சந்தை மதிப்பில் இவ்வளவு இழப்பா?! - Seithipunal
Seithipunal



முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்குச் சந்தை மதிப்பு ரூ. 73 ஆயிரத்து 470 கோடி இழப்பை சந்தித்துள்ளது. 

ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை கணிப்பின் படி ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரராக இருப்பவர் ரிலையன்ஸ் நிறுவனங்களின் இயக்குனர் முகேஷ் அம்பானி. கடந்த ஜூலை 22ம் தேதி நிலவரப்படி, இவர் ரூ. 9 லட்சத்து 76 ஆயிரத்து 320 கோடிகளுக்கு அதிபதியாக உள்ளார். 

இவரது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் எண்ணெய், சில்லறை விற்பனை, தொலைத்தொடர்பு, மற்றும் பல துறைகளில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் கடந்த திங்கட் கிழமை (ஜூலை 23) சந்தை நிலவரப்படி, முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன சந்தை மதிப்பீடு ரூ. 20 லட்சத்து 30 ஆயிரத்து 488 . 32 கோடியாக உள்ளது. அதன்படி ரூ. 73 ஆயிரத்து 470 . 59 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. 

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் 1.90 லட்சம் பங்குகள் BSE யிலும், 98.37 லட்சம் பங்குகள் NSE யிலும் வர்த்தகம் செய்யப் பட்டுள்ளன . இந்நிலையில் இன்று 2 வது நாளாக BSE பங்குகள் 102.57 புள்ளிகளும், NSE பங்குகள் 21.65 புள்ளிகளும் சரிந்துள்ளன. 

முன்னதாக கடந்த வெள்ளிக் கிழமையன்று, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் தனது ஜூன் காலாண்டின் நிகர லாபம் 5 சதவீதம் சரிவை சந்தித்துள்ளதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் தான் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கு மிக பிரம்மாண்டமான முறையில் திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Reliance Industries Lost a Huge Amount in Market Evaluation


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->