மத்திய அரசை கண்டித்து இன்று அரசி ஆலை வியாபாரிகள் வேலை நிறுத்த போராட்டம்.!
rise factory will strike today
தமிழகத்தில் அரிசி மீதான 5 சதவீத ஜிஎஸ்டியை நீக்க வலியுறுத்தி அரசி ஆலை வியாபாரிகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
மத்திய ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில், அரிசி உள்ளிட்ட அனைத்து வகை உணவு தானியங்களுக்கும் 5 சதவீதம் வரி விதிக்கப்பட்டது. இதனை ரத்து செய்ய வலியுறுத்தி, நாடு முழுவதும் அரிசி ஆலை மற்றும் அனைத்து தானிய வர்த்தக அமைப்புகள் வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்திருந்தனர்.
இதனை தொடர்ந்து தமிழகம், கர்நாடகா, கேரளா, ஆந்திரா, உத்தர பிரதேசம், உத்தரகண்ட், உள்ளிட்ட மாநிலங்களில் அரிசி ஆலை உரிமையாளர்கள் வேலை நிறுத்த போரட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் தமிழகம் முழுவதும் சுமார் 4,000 அரிசி ஆலைகள் மற்றும் 20,000 சில்லறை விற்பனை கடைகள் மூடப்பட்டுள்ளன.
அரிசி மீது விதிக்கப்பட்டுள்ள 5% ஜி.எஸ்.டி வரியின் காரணமாக, அரிசியின் விலை தற்போது இருப்பதை விட, 3 முதல் 5 ரூபாய் வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக அரிசி ஆலை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
English Summary
rise factory will strike today