யு.பி.எஸ்.சி. சிவில் சர்வீஸ் தேர்வுக்கான தேதி வெளியானது!
UPSC Exam 2025 date announce
ஐ ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எஃப்.எஸ், ஐ.ஆர்.எஸ் போன்ற பல பணிகளுக்கான 979 பணியிடங்களை நிரப்ப, சிவில் சர்வீஸ் தேர்வுக்கான தேதிகளை யு.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ளது. அதன்படி,
சிவில் சர்வீஸ் முதல்நிலைத்தேர்வு வரும் மே 25ம் தேதி நடைபெறும்.
இந்த தேர்வுக்கு இன்று முதல் வரும் பிப்ரவரி 11ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று யு.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது. .
சிவில் சர்வீஸ் முதல்நிலைத்தேர்வு நடைபெறும் மே 25ம் தேதி, இந்திய வன சேவைக்கான (Indian Forest Service - 150 பணியிடங்களுக்கான) தேர்வும் நடைபெறும் என்று யு.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.
கடந்த முறை 1056 பணியிடங்களை நிரப்ப சிவில் சர்வீஸ் தேர்வு நடத்தப்பட்ட நிலையில், தற்போது 979 பணியிடங்களை நிரப் நடத்தப்படவுள்ளது. கடந்த முறையை விட 77 பணியிடங்கள் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சிவில் சர்வீஸ் யுபிஎஸ்சி யுபிஎஸ்சி தேர்வு யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வு Civil Service Exam upsc UPSC exam
English Summary
UPSC Exam 2025 date announce