ராயல் என்ஃபீல்டு: புதிய 750சிசி பைக்குகளை களம் இறக்கும் Royal Enfield: எதிர்பார்ப்பில் பைக் பிரியர்கள்! - Seithipunal
Seithipunal


சென்னை – மோட்டார் சைக்கிள் ரசிகர்களுக்குச் செம்ம அப்டேட்! இந்தியாவின் முன்னணி மோட்டார் சைக்கிள் நிறுவனம் ராயல் என்ஃபீல்டு, புதிய 750சிசி பைக்குகள் வரிசையை விரைவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இம்முறை, இமாலயன் 750, இன்டர்செப்டர் 750, மற்றும் கான்டினென்டல் ஜிடி 750 ஆகிய மூன்று முக்கிய மாடல்கள் இந்த வரிசையில் இடம் பெறும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

500சிசிக்கு குறைவான பைக்குகளை மட்டுமே தயாரித்திருந்த ராயல் என்ஃபீல்டு, கிளாசிக் 350, புல்லட் 350 போன்ற ஹிட் மாடல்களுடன் இந்திய சந்தையில் பல ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. 2018ல் அறிமுகமான இன்டர்செப்டர் 650 மற்றும் கான்டினென்டல் ஜிடி 650 மூலம் நடுத்தர எடை பிரிவிலும் பலத்த முத்திரையை பதித்தது.

இப்போது, பைக்கிங் அனுபவத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல, 750cc எனும் புதிய பிரிவில் குதிக்கிறது.

இந்த புதிய 750சிசி பைக்குகளில் இரட்டை சிலிண்டர் எஞ்சின் இருக்கும் என நம்பப்படுகிறது. இது தற்போதைய 650சிசி மோடல்களை விட அதிக சக்தி மற்றும் டார்க்கை வழங்கும் வகையில் உருவாக்கப்படும். 650சிசி எஞ்சின் 47 bhp வழங்குகின்ற நிலையில், 750சிசி எஞ்சின் சுமார் 55bhp-60bhp வரை சக்தி வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், புதிய எஞ்சின் புதிய உமிழ்வு விதிமுறைகளை பூர்த்தி செய்யும் வகையிலும், மேம்பட்ட காற்று குளிரூட்டல் மற்றும் கேஸ்கெட் அமைப்புகளுடன் வடிவமைக்கப்படும்.

  • இன்டர்செப்டர் 750 மற்றும் கான்டினென்டல் ஜிடி 7502025 இறுதியில்

  • இமாலயன் 7502026ல்

புதிய 750சிசி பைக்குகளில் கீழ்காணும் முக்கிய அம்சங்கள் இடம்பெறும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன:

  • TFT இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர்

  • Navigation மற்றும் ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி

  • புதிய சுவிட்ச் கியர் அமைப்பு

  • புதிய டெயில் லைட்கள் மற்றும் எக்ஸாஸ்ட் டிசைன்

  • இரட்டை டிஸ்க் பிரேக்குகள் + பைப்ரே காலிப்பர்கள்

  • மேம்பட்ட ABS பிரேக்கிங் சிஸ்டம்

இந்த அம்சங்கள் ராயல் என்ஃபீல்டின் பாரம்பரியத் தோற்றத்தை அசைக்காமல், பயணிகளுக்கு புதிய டெக்னாலஜி அனுபவத்தையும் வழங்கும்.

இந்த பைக்குகள் நேரடியாக Kawasaki Z650, Triumph Trident 660, Honda CB650R, மற்றும் Yamaha MT-07 போன்ற பைக்குகளுடன் போட்டியிடும் வகையில் இருக்கும். ஆனால் விலை மற்றும் பாரம்பரியத்துடன் கூடிய பிராண்ட் இமேஜ் ராயல் என்ஃபீல்டுக்கு ஒரு பெரிய பலமாக இருக்கும்.

ராயல் என்ஃபீல்டின் புதிய 750சிசி வரிசை, இந்திய மற்றும் சர்வதேச சந்தைகளில் அதன் நிலையை மேலும் உறுதி செய்யும் என நிபுணர்கள் எதிர்பார்க்கிறார்கள். மேம்பட்ட பவுர், ஸ்டைலிஷ் டிசைன் மற்றும் ஹாய்-டெக் அம்சங்களுடன் வரவிருக்கும் இந்த பைக்குகள், ராயல் என்ஃபீல்டின் வரலாற்றில் மிக முக்கியமான கட்டமாக அமையும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Royal Enfield Royal Enfield to launch new 750cc bikes Bike enthusiasts in anticipation


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->