'லக்கி பாஸ்கர்' பட இயக்குனருடன் கைக்கோர்க்கும் அஜித்குமார்..?
Will Ajith Kumar join hands with the director of Lucky Bhaskar
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' படம் உலகமெங்கும் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஒடிக்கொண்டிருக்கிறது. இந்த படம் தமிழகத்தில் மட்டும் ஒரு வாரத்தில் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் 'வாத்தி', 'லக்கி பாஸ்கர்' ஆகிய ஹிட் படங்களை இயக்கிய வெங்கி அட்லூரியிடம் அடுத்த படம் குறித்து அஜித் குமார் ஆலோசித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதனால் இருவரும் அடுத்த படத்தில் இணைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது.
சூர்யாவின் 46-வது படத்தை வெங்கி அட்லூரி இயக்கவுள்ளார். தற்போது, இந்த படத்திற்கான வேலைகளில் அவர் பிசியாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படம் முடிந்த கையேடு, அஜித் குமாருடன் கைக்கோர்ப்பதற்கான திட்டத்தை தொடங்கலாம் எனக் கூறப்படுகிறது.
English Summary
Will Ajith Kumar join hands with the director of Lucky Bhaskar