சிறப்பு தோற்றத்தில் அமீர்கான்...! கூலி படத்தில் நடித்ததை உபேந்திரா உறுதி செய்தார்....!!!
Aamir Khan special appearance Upendra confirmed his acting film Coolie
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் பிரபல முன்னணி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் 'கூலி'. இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்தத் திரைப்படத்தில் நாகர்ஜுனா, பகத் பாசில், சத்யராஜ், சௌபின் ஷாஹிர், சுருதிஹாசன், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
மேலும் கூலி படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது முடிவடைந்துள்ள நிலையில், வருகிற ஆகஸ்டு 14-ந் தேதி திரைப்படம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
இதனிடையே , கூலி படத்தில் நடிகர் அமீர் கான் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் என்று இப்படத்தில் நடித்துள்ள உபேந்திரா உறுதிபடுத்தியுள்ளார்.
அண்மையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் உரையாடிய உபேந்திரா, "நான் ஏகலைவன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனக்கு துரோணாச்சாரியார் போன்றவர்" என்று மரியாதையோடு தெரிவித்தார்.
அப்போது, அமீர் கான் கூலி படத்தில் நடித்துள்ளாரா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு ஆம் நடித்துள்ளார்... என்று உபேந்திரா பதிலளித்தார்.
English Summary
Aamir Khan special appearance Upendra confirmed his acting film Coolie