இருநாட்டு உறவுக்கு ஆபத்து! நடிகை மேஹ்னா ஆலம் கைது!  - Seithipunal
Seithipunal


வங்கதேசத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற நடிகையும் முன்னாள் மாடலுமான மேஹ்னா ஆலம், 2020ஆம் ஆண்டு மிஸ் எர்த் பங்களாதேஷ் பட்டத்தை வென்று கவனம் பெற்றவர். 

திரைத்துறையில் பல படங்களில் நடித்துள்ள இவர், சமீபத்தில் காதல் தொடர்பு காரணமாக பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

தகவலின்படி, வங்கதேசத்தில் உள்ள சவுதி அரேபிய தூதரகத்தில் பணியாற்றும் திருமணமான உயர் அதிகாரியுடன் மேஹ்னா நெருங்கிய உறவில் இருந்ததாக கூறப்படுகிறது. 

ஒருவழியாக திருமண ஆசை தெரிவித்த மேஹ்னாவுக்கு அந்த அதிகாரி மறுப்பு தெரிவித்ததால், இருவருக்கிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில், டாக்காவில் உள்ள தனது வீட்டில் மேஹ்னாவை வங்கதேச போலீசார் நேற்று நள்ளிரவில் கைது செய்தனர். 

இருநாட்டு தொடர்புக்கு இழுபறியாக அமையக்கூடிய இந்த சம்பவம், பாதுகாப்பு கோணத்தில் ஆபத்தானது எனக் கருதி, சிறப்பு அதிகார சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, மேஹ்னாவை 30 நாட்கள் காவலில் வைக்க டாக்கா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அவரின் கைது சமூக வலைதளங்கள் மற்றும் சினிமா உலகத்தில் பல்வேறு எதிரொலிகளை ஏற்படுத்தி, விமர்சனங்களை எழுப்பியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Dhaka Actress arrest Saudi Arabia embassy


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->