நடிகர் நிவின் பாலியின் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு.!
actor nivin pali new movie first look poster released
மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நிவின் பாலி. நயன்தாராவுடன் இணைந்து 'டியர் ஸ்டூடன்ஸ்' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் விரைவில் வெளியாகவுள்ளது. இதைத் தொடர்ந்து, தற்போது '1001 நுனாகல்' படத்தை இயக்கிய தமர் கேவி இயக்கத்தில் 'டோல்பி தினேஷன்' என்ற புதிய படத்தில் நடிக்கவுள்ளார்.

அஜித் விநாயகா பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் டான் வின்சண்ட் இசையமைக்கிறார். இந்தப் படத்தில் நிவின் பாலி ஆட்டோ ஓட்டுநராக நடிக்கவுள்ளார். இந்த நிலையில் "டோல்பி தினேஷன்" படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.
நடிகர் நிவின் பாலி இந்த படத்தை தொடர்ந்து, "ஆக்சன் ஹீரோ பைஜு 2, மல்டிவெர்ஸ் மன்மதன், பேபி கேர்ள்" போன்ற திரைப்படங்களை தன் கைவசம் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
actor nivin pali new movie first look poster released