சூர்யாவின் "சிக்ஸ் பேக்" விவகாரம்: சிவக்குமாரின் பெருமை பேச்சு; நடிகர் விஷால் பதிலடி..!
Suriya six pack issue Sivakumar boastful speech Actor Vishal response
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா 'ரெட்ரோ' படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே நாயகியாக நடித்துள்ளார். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சூர்யாவின் அப்பாவும் நடிகருமான சிவக்குமார் பேசியது சர்ச்சையானது.
அதாவது, "என் பையன் சூர்யாவுக்கு முன்னாடி தமிழ்நாட்டில் சிக்ஸ் பேக் வைத்த நடிகர் யாராவது இருக்காங்களா?" எனப் பெருமையாகப் பேசி இருந்தார். இதன் காரணமாக சமூக வலைதளங்களில் ரசிகர்களிடையே சிக்ஸ் பேக் தொடர்பான விவாதம் அனல் பறந்தது.
இதன் போது நடிகர் விஷாலின் ரசிகர்கள் சத்யம் படத்திலேயே அவர் சிக்ஸ் பேக் வைத்துவிட்டார் எனக் பதிவிட்டார்கள். இது குறித்த விஷால் கூறியுள்ளதாவது, "முதல்முறையாக தனுஷ்தான் பொல்லாதவன் படத்திற்காக சிக்ஸ் பேக் வைத்தார். பிறகு நான் சத்யம், மதகஜராஜா படங்களுக்காக சிக்ஸ் பேக் வைத்தேன். சிவக்குமார் மறந்து அப்படி சொல்லி இருக்கலாம்'' என்று கூறியுள்ளார்.
அதாவது, வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த பொல்லாதவன் 2007-ஆம் ஆண்டு வெளியானது. சூர்யா நடித்த 'வாரணம் ஆயிரம்' 2008 நவம்பரிலும், விஷாலின் சத்யம் 2008 ஆகஸ்டிலும் வெளியானமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Suriya six pack issue Sivakumar boastful speech Actor Vishal response