விஜய் அம்மாவின் 52-வது திருமண நாள் பரிசாக பிஎம்டபிள்யூ காரை பரிசளித்துள்ள எஸ்.ஏ.சந்திரசேகர்..!
SA Chandrasekhar gifted Vijay mother a BMW car as a 52nd wedding anniversary gift
தமிழ் சினிமாவில் 80, 90-களில் கொடிக்கட்டி பறந்த இயக்குநர்களில் ஒருவராக எஸ் ஏ சந்திரசேகர். மறைந்த கேப்டன் விஜயகாந்தின் 'சட்டம் ஒரு இருட்டறை' படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் வெற்றி இயக்குனராக மாறினார். தன்னுடைய மகன் விஜய்யை வைத்து பல படங்களை இயக்கி அவரை அறிமுகம் செய்தார்.
தன் மனைவி ஷோபாவுடன் சென்னையில் வசித்து வரும் எஸ் ஏ சி, தன் மகன் விஜய்யின் த.வெ.க கட்சி சார்பாக நடக்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டும் வருகிறார். இந்நிலையில், எஸ்.ஏ.சந்திரசேகர் - ஷோபா தம்பதியினர், 52-வது திருமணநாளை கொண்டாடியுள்ளனர்.
அதற்காக ஷோபாவுக்கு திருமணநாள் பரிசாக புதிய பிஎம்டபிள்யூ கார் ஒன்றினை வாங்கி கொடுத்துள்ளார். ஷோரூமில் கார் டெலிவரி எடுத்த வீடியோவை எஸ் ஏ சந்திரசேகர் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த காரின் விலை ரூ75 லட்சம் என கூறப்படுகிறது.
இந்த வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
English Summary
SA Chandrasekhar gifted Vijay mother a BMW car as a 52nd wedding anniversary gift