மூக்குத்தி அம்மன் 2: நயன்தாரா - சுந்தர்.சி இடையே மோதலா..? உண்மை என்ன..?
A conflict between Nayanthara and Sundar C What is the truth
கடந்த 2020-ஆம் ஆண்டு ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடித்த 'மூக்குத்தி அம்மன்' படம், வெளியாகி ஹிட்டானது. இந்த படத்தின் இரண்டாம் பாகம் சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகி வருகிறது.
இந்த படத்திலும் நயன்தாரா அம்மனாக நடிக்கிறார். படத்தில் துனியா விஜய், ரெஜினா கசாண்ட்ரா, யோகி பாபு, ஊர்வசி, அபிநயா, ராமச்சந்திர ராஜு உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள். சமீபத்தில் சென்னையில் படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், சுந்தர்.சி - நயன்தாரா இடையே திடீர் மோதல் வெடித்திருப்பதாகவும், இதனால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியானது.
இது தொடர்பில், சுந்தர்.சி கூறியுள்ளதவது; "எனக்கும், நயன்தாராவுக்கும் எந்த பிரச்சினையும் இல்லை. எதனால் இப்படிப்பட்ட தகவல் பரவியது என்பதே புரியவில்லை. நயன்தாரா ரொம்ப 'ஸ்டிரிக்ட்' ஆன நடிகை. படப்பிடிப்பில் ஒரு அரை மணி நேரம் ஓய்வு கிடைத்தால் கூட, கேரவனுக்கு செல்ல மாட்டார். எங்களுடனேயே படப்பிடிப்பில் அமர்ந்திருப்பார். இந்த மாதிரி வெளியாகும் எல்லா கிசுகிசுக்களுக்கும் பதில் சொல்லிக்கொண்டு இருக்க முடியாது" என்று அந்த பரபரப்பு தகவலுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
English Summary
A conflict between Nayanthara and Sundar C What is the truth