பாகிஸ்தான் நடிகர் நடித்த பாலிவுட் படத்திற்கு மத்திய அரசு தடை..?
Central government bans a Bollywood film starring a Pakistani actor
காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பலியாகியுள்ளனர். இந்த சம்பம் முழு நாட்டையும் கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்த தாக்குதலுக்கு பின்னர் மத்திய அரசு கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், பாகிஸ்தானை சேர்ந்த நடிகர் நடித்த பாலிவுட் படத்திற்கு தடை விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
பாகிஸ்தானை சேர்ந்த நடிகர் பாவத் கான் மற்றும் வாணி கபூர் நடிப்பில் ' அபிர் குலாய்' என்ற ஹிந்திப்படம் தயாராகியுள்ளது. இந்த படத்தினை விவேக் அகர்வால் தயாரிக்க, படத்தை ஆர்த்தி எஸ் பகதி என்பவர் இயக்கி உள்ளார். இப்படம் மே 09-ஆம் தேதி திரையிடப்படுவதாக இருந்தது.

இதற்கிடையில், பகல்ஹாம் தாக்குதலை அடுத்து, இந்தியா பாகிஸ்தான் இடையில் உள்ள உறவு மோசமாகியுள்ளது. இப்படத்தை வெளியிடுவதற்கு மஹாராஷ்டிராவில் ராஜ் தாக்கரேயின் நவநிர்மான் சேனா கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவத்தின் பின்னணியில் பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதிகள் உள்ளனர். இதனால், அந்நாட்டு நடிகர் பாவத் கான் நடிப்பில் தயாராகி உள்ள படத்தை புறக்கணிக்க வேண்டும் என மேற்கு இந்திய சினிமா கூட்டமைப்பு சங்கம் உள்ளிட்ட சில அமைப்புகள் வலியுறுத்த தொடங்கியுள்ளன.

பயங்கரவாதிகளை ஊக்குவிக்கும் பாகிஸ்தானுக்கு எதிராக மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வரும் சூழ்நிலையில், இந்த படத்தை இந்தியாவில் வெளியிட தடை விதிக்க மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
English Summary
Central government bans a Bollywood film starring a Pakistani actor