இல்லத்தரசிகள் ஷாக்! கிடுகிடுவென உயர்ந்த சிலிண்டர் விலை!
The price of the cylinder is high
சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப சிலிண்டரின் விலை உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கச்சா எண்ணெயிலிருந்து பெட்ரோல், டீசல், எரிவாயு உள்ளிட்ட பொருட்களை பிரித்தெடுக்கின்றனர். பெட்ரோல் டீசல் விலையை சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை கேட்ட நிர்ணயத்தை கொள்கிறது.
பெட்ரோல், டீசல் எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு கச்சா எண்ணெய் விலைக்கேற்ப விலையை நிர்ணயித்து கொள்ள அனுமதி வழங்கி உள்ளது.
அதேபோல் சமையல் எரிபாடு சிலிண்டரின் விலையை என்னை நிறுவனங்களே நிர்ணயித்து வருகிறது. ஒவ்வொரு மாதமும் சர்வதேச சந்தையின் நிலவரத்திற்கு ஏற்ப இந்த விலை நிர்ணயம் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
சமையல் மற்றும் வணிக சிலிண்டர் விலையை குறித்து எண்ணெய் நிறுவனங்கள் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, 19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டர் விலை ரூ. 7.50 உயர்த்தப்பட்டு ரூ.1817 க்கும் வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை. 14 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை மாற்றம் இன்றி ரூ.818.50 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
English Summary
The price of the cylinder is high