இங்கிலாந்துக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரை கைப்பற்றிய இந்திய அணி..! - Seithipunal
Seithipunal


இங்கிலாந்துக்கு எதிரான 04வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது. புனேவில், இன்று நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர் முடிவில் 09 விக்கெட் இழப்புக்கு 181 ரன் எடுத்தது.

இங்கிலாந்து அணியின் சாகிப் மகமூது இரண்டாவது ஓவரில் மூன்று விக்கட்டுகளை எடுத்து இந்தி அணிக்கு அதிர்ச்சி கொடுத்தார். இவ்வாறு தொடக்க ஆட்டக்காரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, ஹர்திக் பாண்ட்யா மற்றும் சிவம் துபே இருவரும் இணைந்து இங்கிலாந்து பவுலிங்கை அடித்து நொறுக்கினர்.

6 ஆவது விக்கெட்டிற்கு இவர்கள் இருவரும் 87 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ஷிவம் துபே,(53) ஹர்திக் பாண்ட்யா (53) அரை சதம் அடித்து இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இறுதியில் 20 ஓவரில் 09 விக்கெட்டுகளை இழந்து 181 ரன் எடுத்தனர்.

182 ரன் இலக்காகக்கொண்டு அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் பில் சால்ட் 23 ரன்களும், பென் டக்கெட் 39 ரன்கள் எடுத்தனர்.

அதை தொடர்ந்து ஹாரி புரூக் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தார். அவரது 51 ரங்களில் வருண் சக்கவர்த்தியின் பௌலிங்கில் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த வீரர்கள், அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில் 20 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 166 ரன்களை மாத்திரம் இங்கிலாந்து அணி எடுத்தது. 

இந்நிலையில் இந்திய அணி 15 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் வெவென்றுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The Indian team won the T20 cricket series against England


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->