கிரிக்கெட் ஜாம்பவான் சச்சினுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது..! - Seithipunal
Seithipunal


பி.சி.சி.ஐ.,யின் வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு சச்சினுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின்-க்கு வயது 51. மும்பையை சேர்ந்த இவர், தனது 16வது வயதில் (1989) கராச்சியில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் அறிமுகமானார். 

கடந்த 2013-இல் ஓய்வு பெற்ற சச்சின், 200 டெஸ்ட் (15,921 ரன், 51 சதம்), 463 ஒருநாள் (18,426 ரன், 49 சதம்), ஒரே ஒரு 'டி-20' (10 ரன்) என, 664 சர்வதேச போட்டிகளில் விளையாடினார். 

அத்துடன், சர்வதேச அரங்கில் சதத்தில் சதம், டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் அதிக ரன், அதிக சதம் என பல்வேறு சாதனைகள் படைத்துள்ளார். இந்நிலையில், இவரை கவுரவிக்கும் விதமாக, இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில் 'சி.கே. நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு' தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

மும்பையில் இன்று நடக்கவுள்ள பி.சி.சி.ஐ.,யின் வருடாந்திர விழாவில் சச்சினுக்கு, இவ்விருது வழங்கப்படுகிறது. இவ்விருதை பெறும் 31வது வீரர் சச்சின் ஆகும்.

இந்திய டெஸ்ட் அணியின் முதல் கேப்டனான சி.கே. நாயுடுவை கவுரவப்படுத்தும் விதமாக கடந்த 1994 முதல், அவரது பெயரில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுகிறது. இவ்விருது வென்ற முதல் வீரர் லாலா அமர்நாத் (1994). கடைசியாக 2023ல் பரூக் இன்ஜினியர், ரவி சாஸ்திரிக்கு இவ்விருது வழங்கப்பட்டது. கவாஸ்கர் (2012), கபில்தேவ் (2013), ஸ்ரீகாந்த் (2019) ஆகியோரும் இவ்விருதினை வென்றவர்கள்.

இந்நிலையில், பி.சி.சி.ஐ.,யின் சிறந்த வீரருக்கான 'பாலி உம்ரிகர்' விருதுக்கு இந்திய வேகப்பந்துவீச்சாளர் பும்ரா தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே இவர், 2018-19, 2021-22-0-இல் இவ்விருது வென்றிருந்தார். சிறந்த வீராங்கனைக்கான விருதுக்கு 'டாப்-ஆர்டர்' பேட்டர் ஸ்மிருதி மந்தனா தேர்வானார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Cricket legend Sachin Tendulkar to receive Lifetime Achievement Award


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->