ஒரே நாளில் உயர்ந்த காய்கறி விலை - அதிர்ச்சியில் பொதுமக்கள்.!
vegetables and fruit price increase
ஒரே நாளில் உயர்ந்த காய்கறி விலை - அதிர்ச்சியில் பொதுமக்கள்.!
கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தக்காளி, வெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் உள்ளிட்ட காய்கறிகளின் விலை மிகக் கடுமையாக உயர்ந்திருந்தது. அதாவது, தக்காளி கிலோ 200 ரூபாய், சின்ன வெங்காயம் 180 ரூபாய், இஞ்சி 300 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்பட்டதால், பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளானார்கள்.
அதன் பின்னர் படிப்படியாக விலை குறைந்து இயல்பான விலையில் விற்பனை செய்யபட்டது. இந்த நிலையில், கர்நாடக மாநிலத்தில் பல இடங்களில் பெய்து வரும் கனமழை காரணமாகவும், உற்பத்தி குறைவு காரணமாகவும் கோயம்பேடு காய்கறி சந்தைக்கு வரும் காய்கறிகளின் வரத்து குறைவாக உள்ளது.
இதனால், காய்கறிகள் மற்றும் பழங்களின் விலை இன்று கடுமையாக உயர்ந்துள்ளது. இன்று மொத்த விலையில் பீன்ஸ் கிலோ 70 ரூபாய்க்கும், அவரைக்காய் கிலோ 60 ரூபாய்க்கும், பெரிய வெங்காயம் கிலோ 32 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல், சின்ன வெங்காயம் கிலோ 90 ரூபாய்க்கும், முருங்கைக்காய் கிலோ 80 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சில காய்கறிகளின் விலை இப்படி உயர்ந்திருக்கின்ற நிலையில், தக்காளி, முட்டைக்கோஸ் உள்ளிட்ட வேறு பல காய்கறிகளின் விலை கணிசமாக குறைந்துள்ளது.
இதைத் தொடர்ந்து ஆப்பிள் கிலோ 280 ரூபாய் வரையிலும் கொய்யா கிலோ 80 முதல் 100 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதனால், பொதுமக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
English Summary
vegetables and fruit price increase