ஹெல்மெட் அணிந்து வந்த மர்மக்கும்பல்! திரும்பி பார்த்து உஷார் ஆகும்முன் நெல் வியாபாரியிடருந்த ரூ.30 லட்சம் பறித்து சென்ற கும்பல்!
The mysterious gang wearing helmets The gang stole Rs 30 lakhs from the paddy dealer before looking back and warning
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி புதுவயல் பகுதியை சேர்ந்த அரவிந்தன் (வயது 27), நெல் வியாபாரம் செய்பவராகும். அவர் தந்தையுடன் சேர்ந்து காரைக்குடி மற்றும் அதன் சுற்றியுள்ள விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்து வெளிச்சந்தைகளில் விற்பனை செய்து வந்தார்.
இன்று காலை, அரவிந்தன் ரூ.30 லட்சம் பணத்தை ஒரு நகை வியாபாரியிடமிருந்து வாங்கியுள்ளார். பின்னர், அந்த பணத்தை தனது இருசக்கர வாகனத்தின் இருக்கைக்கு அடியில் வைத்து புதுவயல் நோக்கி சென்று கொண்டிருந்தார். இது வழக்கம் போல, அதிக பணத்தை வசூலிக்கும் போது அவர் பொதுவாக உறவினர்கள் மற்றும் நண்பர்களை துணையாக அழைத்து செல்வதுதான். ஆனால் இன்று, சனிக்கிழமை விடுமுறை தினம் என்பதால், அவர் தனியாகவே சென்றார்.
அப்போது, காரைக்குடி செக்காலை சாலை, ஜாகிர் உசேன் தெருவில் 4 பேர் இருசக்கர வாகனத்தில் வந்து திடீரென்று அரவிந்தனின் வாகனத்தை மோதினர். இதில் நிலை குலைந்த அரவிந்தன் கிழே விழுந்தார். அடுத்த விநாடி, அந்த நபர்கள் பெப்பர் ஸ்பிரே கொடுத்து அரவிந்தனை தாக்கி, ரூ.30 லட்சம் பணத்தை கலைக்கொண்டு சென்றனர். மேலும், அவர் சொந்தமாக வைத்திருந்த இருசக்கர வாகனத்தையும் திருடி தப்பியோடி சென்றனர்.
இதையடுத்து, அரவிந்தன் காரைக்குடி போலீசில் புகார் அளித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காரைக்குடி துணை போலீசு சூப்பிரண்டு பார்த்திபன் விசாரணை நடத்தி, சி.சி.டி.வி. கேமரா காட்சிகளைக் கண்டு விசாரணையை ஆரம்பித்தார். அத்துடன், கொள்ளையர்களை பிடிக்க இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த சம்பவம், காரைக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி, முக்கிய தெருவில் நடந்த துணிகர கொள்ளை சம்பவமாக மாறியுள்ளது. போலீசார், இந்த கொள்ளை சம்பவத்தை திட்டமிட்டு செய்திருப்பதாகவும், கொள்ளையர்கள் தெரிந்த நபர்களாக இருக்கலாம் என்றும் சந்தேகிக்கின்றனர்.
English Summary
The mysterious gang wearing helmets The gang stole Rs 30 lakhs from the paddy dealer before looking back and warning