சகுனி திரைப்பட இயக்கிய இயக்குநர் சங்கர் தயாள் மரணம்! - Seithipunal
Seithipunal



நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான சகுனி திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் சங்கர் தயாள் (வயது 47), நெஞ்சுவலி காரணமாக இன்று காலமானார். சங்கர் தயாளுக்கு ஒரு மகன் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். 

சகுனி திரைப்படத்தின் மூலம் பிரபலமான சங்கர் தயாள், அதன் பிறகு 2016 ஆம் ஆண்டு விஷ்ணு விஷால் நடிப்பில் வீர தீர சூடன் படத்தை இயக்கியிருந்தார். தற்போது, யோகி பாபுவை மையமாகக் கொண்டு குழந்தைகள் முன்னேற்ற கழகம் என்ற படத்தை இயக்கி முடித்திருந்தார்.  

நுங்கம்பாக்கத்தில் இத்திரைப்படத்துக்கான பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. நிகழ்வுக்கு வந்த அவர், நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பே நெஞ்சுவலியால் பாதிக்கப்பட்டதாக கூறியுள்ளார். 

உடனடியாக அருகிலிருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.  குழந்தைகள் முன்னேற்ற கழகம்* படம் திரைக்கு வருவதற்கு முன்பே இயக்குநர் மறைந்தது சினிமாத் துறையையும் ரசிகர்களையும் பேரதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Sakuni Director Sankar Dhayal


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->