நடிகை கீர்த்தி சுரேஷின் திருமணத்தில் விஜய் - வைரலாகும் புகைப்படம்.! - Seithipunal
Seithipunal


தென்னிந்திய நடிகையாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் தமிழில் "ரஜினிமுருகன், ரெமோ, பைரவா, தானா சேர்ந்த கூட்டம், மாமன்னன், சைரன்" உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். 'நடிகையர் திலகம்' படத்தில் சாவித்ரியாக நடித்து பாராட்டை பெற்ற இவர் அந்த படத்திற்கு தேசிய விருதையும் வென்றார்.

தற்போது, கீர்த்தி சுரேஷ் அட்லி இயக்கத்தில் உருவான பேபிஜான் என்ற இந்தி படத்தில் வருண் தவானுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த நிலையில் அவர் தனது பள்ளி கால நண்பரான ஆண்டனியை காதலித்து இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த 12-ந் தேதி திருமணம் செய்து கொண்டார். 

இவர்களின் திருமணம் கோவாவில் இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி நடைபெற்றது. அதில், நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த திருமணத்துக்காக கோவா சென்றிருந்த தவெக தலைவரான நடிகர் விஜய், மணமக்களை வாழ்த்தியுள்ளார்.

இந்தத் திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை நடிகை கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார். அதில், நடிகர் விஜய் மணமக்களை வாழ்த்தும் புகைப்படத்தை கீர்த்தி சுரேஷ் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vijay going to keerthi suresh marriage photo viral


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->