லீக்கானது கூலி படம்!.....வேதனையின் உச்சத்தில் லோகேஷ் கனகராஜ்!....2 மாத உழைப்பு வீணாகிவிட்டது! - Seithipunal
Seithipunal



லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ திரைப்படம் கடந்த ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பில் லலித்குமார் தயாரித்த இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்தார்.  

தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்தின் 171-வது திரைப்படமாக கூலி பான் இந்திய படமாக உருவாகி வருகிறது. இந்த படம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் நிலையில், படப்பிடிப்பு ஐதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இந்த நிலையில் கூலி திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகர்ஜுனா தொடர்பான படப்பிடிப்புக் காட்சிகளை இணையத்தில் மர்ம நபர்கள் வெளியிட்டனர். 

இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில்,  ஒரேயொரு விடியோ பதிவு மூலம் ஏராளமான திரைக் கலைஞர்கள் மற்றும் பணியாளர்களின் கடந்த இரண்டு மாத கால கடின உழைப்பு வீணாகிவிட்டது. 

மேலும் இதேபோல படக்காட்சிகள் வெளியிடப்பட்டால், ஒட்டுமொத்த படத்தின் சுவாரசியத்தையும் கெடுத்து விடும் என்றும், ஆகவே, இதுபோன்ற செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாமென ஒவ்வொருவரையும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி என்று  பதிவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A coolie movie Leaked Lokesh Kanagaraj at the peak of agony 2 months of work wasted


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->