திடீரென தெலுங்குக்கு தாவிய நடிகர் சூர்யா..கரணம் என்ன தெரியுமா?
Actor Surya is all set to make his debut in Telugu. Do you know what Karanam is?
சந்து மொண்டேட்டி இயக்கும் தெலுங்கு படத்தில் சூர்யா நடிப்பது உறுதியாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக ஜொலிப்பவர் நடிகர் சூர்யா.இவர் பூவெல்லாம் கேட்டுப்பார், உயிரில் கலந்தது, பேரழகன், சில்லுனு ஒரு காதல் என பல படங்களில் நடிகை ஜோதிகாவுடன் இணைந்து நடித்தார் . அப்போது இவர்களுக்குள் காதல் மலர்ந்தது.
பின்னர் இரு வீட்டார் சம்பந்தத்துடன் இருவரும் 2007ல் நடிகை ஜோதிகாவும், நடிகர் சூர்யாயும் திருமணம் செய்து கொண்டு தற்பொழுது மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.இதையடுத்து இத்தம்பதியினருக்கு தியா, தேவ் என்று இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இந்தநிலையில் திருமணத்திற்கு பிறகு நடிக்காமல் இருந்து வந்த ஜோதிகா தற்போது ஒரு சில படங்களில் நடித்துவருகிறார்.நடிகர் சூர்யா தொடர்ந்து நடித்துவருகிறார்.
இந்தநிலையில் நடிகர் சூர்யாவின் 44-வது படமான 'ரெட்ரோ' படம் பீரியாடிக் கேங்ஸ்டர் மற்றும் காதல் பின்னணியை கதைக்களமாக கொண்டு உருவாகி உள்ளது. இந்த படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். நடிகை பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படத்தில் ஜெயராம், கருணாகரன், ஜோஜு ஜார்ஜ், மற்றும் சுஜித் ஷங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளஇப்படம் வருகிற மே 1-ந் தேதி தொழிலாளர் தினத்தில் வெளியாக உள்ளது.
இந்தநிலையில் தமிழில் சூர்யா நடித்த பல படங்கள் தெலுங்கு மொழியில் டப்பிங் செய்து வெளியிடப்பட்டு வருகின்றன. இதன் மூலம் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் சூர்யாவுக்கு அதிக ரசிகர்கள் சேர்ந்து இருக்கிறார்கள் என கூறப்படுகிறது . மேலும் நேரடி தெலுங்கு படத்தில் நடிக்க வேண்டும் என்பது எனது கனவு என்றும் நல்ல கதை அமைந்தால் தெலுங்கு படத்தில் நடிப்பேன் என்று சூர்யா சமீபகாலமாக பேசி வந்தார்.
இந்த நிலையில் சந்து மொண்டேட்டி இயக்கும் தெலுங்கு படத்தில் சூர்யா நடிப்பது உறுதியாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து சந்து மொண்டேட்டி கூறும்போது, ''நான் இயக்கிய கார்த்திகேயா 2 படம் சூர்யாவுக்கு மிகவும் பிடித்துப் போனது என்றும் இருவரும் சேர்ந்து படம் செய்யலாம் என்று எனக்கு வாக்குறுதி கொடுத்துள்ளார் என்றும் சூர்யாவிடம் இரண்டு கதைகளை சொல்லி இருக்கிறேன் என்றும் இரண்டுமே அவருக்கு பிடித்துள்ளது எனவே இதில் ஒரு கதையை இறுதி செய்வார்'' என கூறியுள்ளார்.
English Summary
Actor Surya is all set to make his debut in Telugu. Do you know what Karanam is?