நகைச்சுவை மன்னன் கவுண்டமணி – ‘ஒத்த ஓட்டு முத்தையா’ இசைவெளியீட்டில் உற்சாக பேச்சு!
Comedy King Kaundamani Othda Otu Muthiya Music Release Exciting Speech
தமிழ் சினிமாவின் நகைச்சுவை உலகில் தனி முத்திரை பதித்தவர் நடிகர் கவுண்டமணி. தனது கேலி, நக்கல், நையாண்டி கலந்த வசனங்களால் பலரை சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்தவர். சினிமாவுக்கு சில வருடங்களாக விலகி இருந்தாலும், மீண்டும் 'ஒத்த ஓட்டு முத்தையா' படத்தின் மூலம் திரையில் தன்னை காட்ட உள்ளார்.
இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்ட கவுண்டமணி, வழக்கம்போல் கலகலப்பாக பேசினார். அவரின் பேச்சு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
நகைச்சுவை மன்னன் கவுண்டமணியும், செந்திலும் இணைந்து நடித்தாலே அந்த படம் வெற்றி என்று சொல்லும் அளவிற்கு அவர்களின் காமெடி பக்காவாக இருக்கும். இந்த ஜோடி இன்றும் சோஷியல் மீடியாவில் டிரெண்டிங் ஆகவே இருக்கிறது.
சினிமாவை விட்டு விலகியிருந்த கவுண்டமணி, சில ஆண்டுகளுக்கு முன் 'எனக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை' படத்தில் நடித்தார். தற்போது, 'ஒத்த ஓட்டு முத்தையா' மற்றும் 'பழனிச்சாமி வாத்தியார்' படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார்.
ஷஷி பிலிம்ஸ் தயாரிப்பில் சாய் ராஜகோபால் இயக்கும் இப்படத்தில், கவுண்டமணியுடன் யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், தம்பி ராமையா, மாரிமுத்து, சிங்கம் புலி, ரவிமரியா, வையாபுரி, முத்துக்காளை, கூல் சுரேஷ், சென்ராயன், லேகா ஶ்ரீ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இசை வெளியீட்டு விழாவில் பேசிய கவுண்டமணி,"இந்த படம் குடும்பத்தோடு வந்து பார்க்கவேண்டிய படம். அனைவரும் வந்து பாருங்க. இந்த 'ஒத்த ஓட்டு முத்தயாவை' வெற்றி ஓட்டு முத்தயாவாக மாற்றுங்கள். அது உங்கள் கடமை, உங்கள் விருப்பம்!" என தனது பாணியில் பேசினார்.
அதோடு,"கேமரா மேன் பெயரை சொல்ல மறந்துவிட்டேன், சாரி! கேமரா மேன் காத்தவராயன் சிறப்பாக படம் எடுத்துள்ளார். அவருக்கும் என் மனமார்ந்த நன்றி!" என உருக்கமாக கூறினார்.
நீண்ட நாட்களுக்கு பின் கவுண்டமணியின் பேச்சை நேரில் கேட்ட ரசிகர்கள் கைத்தட்டி, விசில் அடித்து உற்சாகம் காட்டினர்.
கவுண்டமணி மீண்டும் முழுவீச்சில் திரையுலகிற்கு வருவாரா? என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.
English Summary
Comedy King Kaundamani Othda Otu Muthiya Music Release Exciting Speech