ஷூட்டிங் ஸ்பாட்டில் நிற்காமல் சென்ற லாரியால் விபத்து.. அதிர்ச்சியில் விஷால் படக்குழு.!  - Seithipunal
Seithipunal


விஷாலின் மார்க் ஆண்டனி ஷூட்டிங் ஸ்பாட்டில் விபத்து ஏற்பட்டுள்ளது.

இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் திரிஷா இல்லனா நயன்தாரா என்ற படத்தின் மூலம் தாக்கத்தை ஏற்படுத்தியவர். அதன் பின் சிம்புவின் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் திரைப்படத்தை இயக்கியிருந்தார். 

இந்த திரைப்படம் சிம்புவின் வாழ்க்கையில் தோல்வி படமாக அமைந்தது. இது குறித்து, அப்பட தயாரிப்பாளர் சிம்பு சரிவர ஒத்துழைக்காத காரணத்தால் தான் படம் தோல்வியை தழுவியது என்று குற்றம் சாட்டியிருந்தார். இதனைத் தொடர்ந்து தற்பொழுது நடிகர் விஷாலுடன் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணி அமைத்துள்ளார்.

இப்படத்திற்கு மார்க் ஆண்டனி என பெயரிடப்பட்டுள்ள நிலையில் இதற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க வில்லனாக நடிகர் எஸ் ஜே சூர்யா நடித்து வருகின்றார். பூந்தமல்லியில் இருக்கும் ஈவிபி ஃபிலிம் சிட்டியில் இப்படத்தின் சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில், அப்போது காட்சிக்காக லாரி பயன்படுத்தப்பட்ட போது வேகமாக எங்கும் நிற்காமல் சென்று மோதி விபத்தை ஏற்படுத்தியது. 

ஆனால், இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று படக்குழு தெரிவித்துள்ளது. இந்த வீடியோ தற்போது வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Accident In Vishal movie shooting spot


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->