மாஞ்சா நூல் கழுத்தை அறுத்து 4 பேர் பலி.!
four peoples died for manja thread cut neck in gujarat
தை முதல் நாளான இன்று வடமாநிலங்களில் மகர சங்கராந்தி பண்டிகை பல்வேறு பெயர்களில் கொண்டாடப்படுகிறது. அதன் படி இன்று குஜராத்தில் உத்தராயண் என்ற பெயரில் இந்தப் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
இந்த நாளில் மக்கள் வானில் பட்டம் விட்டு கொண்டாடுவது வழக்கம். இந்த நிலையில், இன்று குஜராத்தில் உத்தராயண் பண்டிகையின்போது பட்டத்தின் மாஞ்சா நூல் கழுத்தை அறுத்து 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதாவது, பஞ்ச்மகால் மாவட்டம் ஹலோல் நகரில் குர்னால் நான்கு வயது சிறுவன் தனது தந்தையுடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது பட்டத்தின் மாஞ்சா நூல் கழுத்தை அறுத்து உயிரிழந்துள்ளார்.
இதேபோல், மஹாசனா மாவட்டம் வட்பார் பகுதியை சேர்ந்த மன்சாஜி என்பவர் இருசக்கர வாகனத்தில் தனது தோட்டத்திற்கு சென்றுகொண்டிருந்தபோது, பட்டத்தின் மாஞ்சா நூல் கழுத்தை அறுத்து உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
four peoples died for manja thread cut neck in gujarat