உழவுக் குடிகளை ஒரு கிலோ பச்சரிசிக்காக வரிசையில் காக்க வைத்த அரசியல்வாதிகள் - தங்கர் பச்சான்!
Thangar bachan wish pongal
இயக்குனர் தங்கர் பச்சான் விடுத்துள்ள பொங்கல் தின வாழ்த்து செய்தி: தன் உழவுத் தொழிலுக்கு ஆதாரமாக விளங்கும் கதிரவனுக்கும், கால்நடைகளுக்கும் நன்றி செலுத்தி அறுவடை நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் நாள்தான் பொங்கல் திருநாள்.
ஆனால் ஊருக்கெல்லாம் உணவளித்த உழவுக் குடிகளை ஒரு கரும்பு, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரைக்காக வரிசையில் காத்திருக்கும் நிலையில் வைத்துவிட்டு வணிகர்கள், ஊடகங்கள், அரசியல்வாதிகள், பொதுமக்கள் இவர்களெல்லாம் தான் பொங்கல் திருநாளை மகிழ்ச்சியோடு கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்!
English Summary
Thangar bachan wish pongal