திடீர் தகவல்.. நடிகர் அமீர்கானின் தாயார் மருத்துவமனையில் அனுமதி.! - Seithipunal
Seithipunal


கடந்த 24 -ம் தேதி தீபாவளியை முன்னிட்டு பிரபல நடிகர் அமீர்கான் மும்பையில் உள்ள பஞ்சாகனி இல்லத்தில் தனது குடும்பத்தினருடன் சேர்ந்து மிகுந்த உற்சாகத்துடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடினார். இந்த கொண்டாட்டத்தில் அவரது தாயார் ஜீனத்தும் கலந்துக்கொண்டிருந்தார். 

இந்நிலையில் தீபாவளியன்று ஜீனத்திற்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு, அவர் உடனடியாக மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இதையடுத்து, டாக்டர்கள் தொடர்ந்து ஜீனத்தின் உடல் நிலையை கண்காணித்து வந்தனர். தற்போது அவரது உடல் நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக  தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இதைத்தொடர்ந்து, அவர் மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பி வருவதாகவும், ஆனால் சில வாரங்களுக்குஅவர் ஓய்வில் இருக்க வேண்டும் என்றும் டாக்டர்கள் அறிவுறுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் நடந்து சில நாட்கள் ஆகியுள்ளதால், இதுபற்றிய தகவல்கள் தற்போதுதான் வெளிவரத் தொடங்கியுள்ளன. அமீர் கானின் குடும்பத்தினர் ஜீனத்தை உடனிருந்து கவனித்து வருகிறார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor ameerkhan mother admited in hospita


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->