இந்தியன் 2 திரைப்பட இயக்குனருக்கு கடிகாரம் பரிசு தந்த கமல்காசன்.! - Seithipunal
Seithipunal


இந்தியன் 2 திரைப்பட இயக்குனருக்கு கடிகாரம் பரிசு தந்த கமல்காசன்.!

பிரபல இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியாகி பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றத் திரைப்படம் ‘இந்தியன்’. தற்போது இந்த படத்தின் இரண்டாவது பாகம் வெற்றிகரமாக முடிந்துள்ளது. இந்தப் படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார்.

லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால், பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்டப் பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். மேலும், இந்த படத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடித்துள்ளார். 

இந்த நிலையில், நடிகர் கமல்ஹாசன் இந்தப் படத்தினைப் பார்த்து விட்டு இயக்குநர் ஷங்கருக்குத் தனது பாராட்டுகளைத் தெரிவித்து, கடிகாரம் ஒன்றையும் பரிசாகாத் தந்துள்ளார். இது தொடர்பாக நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்தியன் 2’ படத்தின் பிரதான காட்சிகளை இன்று பார்த்தேன். 

என் உளமார்ந்த வாழ்த்துகள் ஷங்கர்! இதுவே உங்கள் உச்சமாக இருக்கக் கூடாது என்பதும் என் அவா. காரணம், இதுதான் உங்கள் கலைவாழ்வின் மிக உயரமான நிலை. இதையே உச்சமாகக் கொள்ளாமல் திமிறி எழுங்கள். பல புதிய உயரங்கள் தேடி!’ என்று பதிவிட்டுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor kamalhasan gift to indiyan 2 movie director


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->