நடிகர் மன்சூர் அலிகானின் முன்ஜாமீன் மனு வாபஸ்! காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


நடிகை திரிஷா குறித்து சர்ச்சை கருத்துக்களை தெரிவித்த வழக்கில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன்ஜாமின் கோரி மனுதாக்கல் செய்த மன்சூர் அலிகானின் மனு வாபஸ் பெறப்பட்டது. 

நடிகர் மன்சூர் அலிகான் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன் ஜாமின் மனு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த மனுவில் ஆயிரம் விளக்கு காவல் நிலையத்திற்கு பதிலாக நுங்கம்பாக்கம் என தவறாக இருந்ததால் வாபஸ் செய்யப்பட்டது. 

இதனை அடுத்து நீதிபதி, நீதிமன்றம் விளையாட்டு மைதானம் அல்ல எனவும் நேரத்தை வீணாக்க வேண்டாம் எனவும் கண்டித்தார். 

மேலும் மன்சூர் அலிகான் தாக்கல் செய்த புதிய மனு மீதான விசாரணை நாளை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

நடிகை திரிஷா குறித்து நடிகர் மன்சூர் அலிகான் பேசிய சர்ச்சை கருத்துக்கு திரைத்துறையில் மட்டுமில்லாமல் பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்தது குறிப்பிடத்தக்கது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actor Mansoor Ali Khan anticipatory bail application withdrawn


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->