சீனாவில் வேறு எந்தப்படமும் செய்யாத சாதனை; மஹாராஜா படத்திற்கு, சீன தூதுவர் வாழ்த்து..! - Seithipunal
Seithipunal


நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த மகாராஜா சீனாவிலும் கூட வெற்றி நடை போட்டு வருகிறது. மகாராஜா திரைப்படம் கொரோனாவுக்கு பிறகு வேறு எந்த படமும் செய்யாத சாதனையைப் படைத்துள்ளதாகச் சீன தூதர் பாராட்டியுள்ளார்.

நடிகர் விஜய் சேதுபதி சோலோ ஹீரோவாக நடித்த படங்கள் எதுவும் கடந்த சில ஆண்டுகளாகப் பெரிதாக ஹிட் அடிக்கவில்லை. இதனால் சில ஆண்டுகளாகவே விஜய் சேதுபதி மார்க்கெட் சரிவில் இருந்தது.

இந்நிலையில், மகாராஜா திரைப்படம் நடிகர் விஜய் சேதுபதியின் 50ஆவது திரைப்படமாக வெளியானது. அத்துடன் தமிழில் எதிர்பார்த்ததை விட ஹிட் அடித்தது. 

கடந்த ஜூன் மாதம் தமிழகத்தில் வெளியான இந்தப் படத்திற்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது. விஜய் சேதுபதிக்கு இந்த படம் ஒரு கம்பேக் படமாகவும் அமைந்தது. 

இந்நிலையில், மகாராஜா கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சீனாவிலும் வெளியானது. அங்கும் இது மிகப் பெரிய வசூல் சாதனையைப் படைத்திருக்கிறது.

கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக அங்கு மகாராஜா வெற்றிகரமாக ஓடி வரும் நிலையில், இப்போது அங்கு ₹100 கோடி கிளப்பில் நுழையவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதற்கு சீன தூதர் படக்குழுவினரை பாராட்டியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Maharaja movie hits box office records in China


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->