பாகிஸ்தானை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது தென் ஆப்பிரிக்கா..! - Seithipunal
Seithipunal


தென் ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் இடையிலான 02-வது மற்றும் கடைசி டெஸ்ட் கேப்டவுனில் நடைபெற்றது. போட்டியின் முதல் இன்னிங்சில் தென் ஆப்பிரிக்கா 615ரன்களும், பாகிஸ்தான் 194 ரன்களும் எடுத்திருந்தன. இதனையடுத்து போட்டி பாலோ ஆன் ஆன நிலையில் தொடர்ந்து 02-வது இன்னிங்சை பாகிஸ்தான் அணிக்கு தொடங்கியது.

தொடக்க ஆட்டக்காரர்களாக ஷான் மசூத் மற்றும் பாபர் அசாம் களமிறங்கினர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 205 ரன்கள் பார்ட்னர்ஷிப் ஆக எடுத்தனர். பாபர் அசாம் 81 ரன்களில் ஆட்டமிழந்தார்.

03-வது நாள் முடிவில் பாகிஸ்தான் 1 விக்கெட்டை இழந்து, 213 ரன்கள்  எடுத்திருந்தது. ஷான் மசூத் 102 ரன்களுடனும், குர்ரம் ஷசாத் 08 ரன்களுடனும் எடுத்து காலத்தில் இருந்த நிலையில், 04-வது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. போட்டியில், தொடர்ந்து ஆடிய குர்ரம் ஷசாத் 18 ரன்னில் ஆட்டமிழந்தார்.

அடுத்ததாக களமிறங்கிய கம்ரான் குலாம், 28 ரன்கள், சவுத் ஷகீல்  23 ரன்கள் என ஆட்டமிழந்தனர். சிறப்பாக விளையாடிய மசூத் 145 ரன்னில் ஆட்டமிழந்தார்.

இதனையடுத்து ரிஸ்வான்- சல்மான் ஜோடி சேர்ந்து பொறுப்புடன் விளையாடினர். ரிஸ்வான் 41 ரன்கள், சல்மான் ரன்கள், ஜமால் 34, ரன்கள்,ஹம்சா ரன்கள் 16 என விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

இதனால் பாகிஸ்தான் அணி 478 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன நிலையில், தென் ஆப்பிரிக்காவுக்கு 58 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது.

இதனையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா 7.1 ஓவரில் 61 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில்
வெற்றி பெற்றது. இதன் மூலம் 02 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

South Africa wins 2nd Test beats Pakistan to clinch series


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->