வைரலாகும் கண்ணப்பா படத்தில் காஜல் அகர்வாலின் புகைப்படம்.!
kajal agarwal in kannappa movie poster released
தெலுங்கில் உருவாகிவரும் ஒரு ஆன்மிக திரைப்படம் கண்ணப்பா. இந்தத் திரைப்படத்தை மிகவும் பிரபலமான மகாபாரதம் தொடரை இயக்கிய பிரபல பாலிவுட் இயக்குநர் முகேஷ் குமார் சிங் இயக்கி இருக்கிறார்.
இந்தத் திரைப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் விஷ்ணு மஞ்சு கண்ணப்பர் என்ற வேடத்தில் நடித்துள்ளார். இவருடன் பிரபல மலையாள நடிகர் மோகன்லால், தெலுங்கு நடிகர் பிரபாஸ், பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வரும் அக்சய் குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்தத் திரைப்படம் பான் இந்தியா படமாக உருவாகி வருகிறது. இதற்கிடையே 'கண்ணப்பா' படத்தை வருகிற ஏப்ரல் மாதம் 25ம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இதற்கிடையே, இந்த படத்தில் நடித்து வரும் பிரீத்தி முகுந்தன், பிரபாஸ், அக்சய் குமார், விஷ்ணு மஞ்சு, போன்ற நடிகர்களின் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில், தற்போது கண்ணப்பா படத்தில் பார்வதி தேவியாக நடித்து வரும், காஜல் அகர்வாலின் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
English Summary
kajal agarwal in kannappa movie poster released