சிறையில் அடைக்கப்பட்ட பிரசாந்த் கிஷோர்; ஜாமீன் பத்திரத்தில் கையெழுத்திட மறுப்பு..! - Seithipunal
Seithipunal


தேர்தல் வியூகத்தில் பிரபலமான பிரசாந்த் கிஷோர் இன்று காலை கைது செய்யப்பட்டிருந்தார்.அவர் ஜாமீன் பத்திரத்தில் கையெழுத்திட மறுத்து விட்டதால், சிறையில் அடைக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

பீகார் தேர்வாணைய தேர்வில் முறைகேடு நடந்ததாக கூறி, சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் என, கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரசாந்த் கிஷோர் அறிவித்திருந்தார். இந்நிலையில், அவர் இன்று காலை கைது செய்யப்பட்டார். 

இதையடுத்து, அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவரது ஆதரவாளர்கள் ஜாமீன் மனு தாக்கல் செய்ய முயற்சித்தனர். ஆனால் அவர் ஜாமீன் மனுவில் கையெழுத்திட மறுத்து விட்டதால், நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கிஷோரை கைது செய்தமைக்கு காரணம் குறித்து நீதிமன்றத்தில் போலீசார் விளக்கியுள்ளனர். தடை விதிக்கப்பட்ட பகுதியில் உண்ணாவிரத போராட்டம் நடந்ததால் கைது செய்யப்பட்டதாகவும், அவர் உண்ணாவிரத போராட்டம் நடந்த இடத்தில் ஒரு மர்மமான வேன் ஒன்று இருந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் சிறையிலும் பிரசாந்த் கிஷோர் தனது உண்ணாவிரதத்தை தொடர இருப்பதாகவும், இது அவரது ஐந்தாவது நாள் உண்ணாவிரத போராட்டம் என்றும் கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Prashant Kishor imprisoned


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->