சக நடிகர் மீது பாலியல் புகார் அளித்த பிரபல நடிகை.!
actor priyansu singh pettition against actor punith sigh rajbuth
சக நடிகர் மீது பாலியல் புகார் அளித்த பிரபல நடிகை.!
போஜ்பூரி நடிகையான பிரியன்சு சிங், தன்னுடன் இணைந்து நடித்த சக நடிகரான புனித் சிங் ராஜ்புத் மீது புகார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நடிகை பிரியன்சு சிங் தெரிவித்ததாவது:-
"சமூக வலைதளங்கள் மூலம் எனக்கு புனித் சிங் ராஜ்புத் அறிமுகம் ஆனார். என் மூலமாகவே அவர் படங்களிலும் நடித்தார். என்னிடம் அன்பாக பழகிய அவர், என்னை திருமணம் செய்வதாக நம்பிக்கை அளித்தார்.
அதனை உண்மை என்று நம்பிய நானும் அவருடன் நெருக்கமாக பழகினேன். ஒருநாள் குடிபோதையில் வீட்டிற்கு வந்த அவர், என்னிடம் தகாத முறையில் அத்துமீறி நடந்து கொண்டார். பின்னர் அவர் என்னிடம் மன்னிப்பு கேட்டு என்னை சமாதானப்படுத்தினார்.
திருமணம் செய்துகொள்வதாக அவர் தொடர்ந்து உறுதி அளித்ததால் நான் இதை பெரிதுபடுத்தவில்லை. இதற்கிடையே அவர் இதேபோல மீண்டும் ஒருமுறை என்னிடம் அத்துமீறினார். நான் இனியும் அவருடன் தொடர்பில் இருக்க விரும்பவில்லை.
திருமணம் செய்துகொள்ளவும் விருப்பமில்லை. எனக்கு நீதி வேண்டும். புனித் சிங் ராஜ்புத் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்'' என்றுத் தெரிவித்தார். இந்த புகார் சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
actor priyansu singh pettition against actor punith sigh rajbuth