சர்ப்ரைஸ் விசிட் கொடுத்த ரஜினி - அதிர்ச்சியில் ஆடி போன பிரியாமணி.! - Seithipunal
Seithipunal


இயக்குநர் அட்லி இயக்கத்தில், ஷாருக்கான், நயன்தாரா, விஜய்சேதுபதி, பிரியாமணி என்று பெரிய நட்சத்திரங்கள் நடிப்பில் வெளியான படம் ’ஜவான்’. இந்தப் படம் வெளியாகி ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ஆயிரம் கோடியைத் தாண்டி சாதனைப் படைத்தது. 

இதனால், ஷாருக்கான் ரசிகர்களும், படக்குழுவும் மகிழ்ச்சியில் திளைத்தனர். அப்போது இயக்குனர் அட்லீ அடுத்ததாக நடிகர்கள் ஷாருக்கான் மற்றும் விஜயை இணைத்து நடிக்க வைப்பேன் என்று தெரிவித்திருந்தார். 

இதற்கிடையே ’ஜவான்’ பட ஷூட்டிங் நடந்து கொண்டிருந்த செட்டிற்கு அருகிலேயே ‘ஜெயிலர்’ படத்தின் படப்பிடிப்பு நடந்துள்ளது. அப்போது, ரஜினி ‘ஜவான்’ செட்டிற்கு சர்ப்ரைஸாக விசிட் கொடுத்திருக்கிறார். இதனை சற்றும் எதிர்பார்க்காத பிரியாமணி அவரைப் பார்த்து அப்படியே ஷாக் ஆகிவிட்டாராம்.

இது தொடர்பாக அவர் பேசுகையில், "பிரியாமணி, ஹவ் ஆர் யூ?' என்று ரஜினி என் கையைப் பிடித்து நலம் விசாரித்தார். சில விநாடிகள் என்ன பேசுவது என்றே தெரியாமல் உறைந்து விட்டேன். அவர் பிடித்த இந்த கையை கழுவாமலே வைத்திருக்க வேண்டும் என்றெல்லாம் கூட நான் நினைத்தேன்” என்றுத் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor rajini surprise visit jawan shooting spot


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->