பவதாரணி மறைவு வருத்தம் அளிக்கிறது - நடிகர் ரஜினிகாந்த் இரங்கல்.!
actor rajinikanth condoles to bavatharani death
தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளரான இளையராஜாவின் மகள் பவதாரிணி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், அவர் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து, அவரது உடல் விமானம் மூலம் சென்னைக்கு கொண்டுவரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. பவதாரணியின் மறைவிற்கு திரை பிரபலங்கள், அரசியல் கட்சியினர் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், பவதாரிணியின் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது, "இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும், பாடகியுமான பவதாரிணியின் மறைவு வருத்தம் அளிக்கிறது. இளையராஜாவை தொலைபேசியில் அழைத்து வருத்தம் தெரிவித்தேன்" என்றுத் தெரிவித்தார்.
English Summary
actor rajinikanth condoles to bavatharani death