நடிகர் பிரபாஸின் பெரியப்பாவும், நடிகருமான ரெபல் கிருஷ்ணம் ராஜூ மரணம்.. சோகத்தில் திரையுலகம்.! - Seithipunal
Seithipunal


பிரபல நடிகர் பிரபாஸின் பெரியப்பாவும், நடிகரும், அரசியல்வாதியுமான ரெபல் கிருஷ்ணம் ராஜு மரணமடைந்தார்.

பழம்பெரும் தெலுங்கு திரைப்பட நடிகர் கிருஷ்ணம் ராஜூ (வயது 83) உடல்நலக்குறைவால் இன்று காலமானார். உடல்நலக்குறைவால் ஹைதராபாத் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

இவர் தெலுங்கு திரையுலகில் 183 திரைப்படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். நாடாளுமன்ற உறுப்பினராகவும், மத்திய அமைச்சராகவும் இருந்த கிருஷ்ணம் ராஜூ, தமிழ்நாட்டில் கவர்னராக நியமிக்கப்படுவதாக இரண்டு முறை கூறப்பட்டது.

இவரது மறைவு தெலுங்கு திரைப்படத்துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் கிருஷ்ணம் ராஜூ மறைவுக்கு திரைப்படத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actor rebel krishnam Raju death


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->