சல்மான் கான் தந்தைக்கு மிரட்டல் - 2 பேர் கைது! - Seithipunal
Seithipunal


பாலிவுட் நடிகர் சல்மான் கான் தந்தைக்கு மிரட்டல் விடுத்தது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விளையாட்டிற்காக சல்மானின் தந்தையை மிரட்டியதாக கைதானவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கைதுசெய்யப்பட்ட இருவர் மீதும் எந்தவித குற்றப் பின்னணிகள் இல்லை என்றும், இதுகுறித்து மேலும் விசாரணை நடந்து வருவதாகவும் போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.

ஏற்கனவே கடந்த ஏப்ரல் மாதம் சல்மான் கான் வீட்டின் முன்பு துப்பாக்கி சூடு நடைபெற்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சல்மான் கானின் வீடு மும்பை பந்த்ரா பகுதியில் அமைந்துள்ளது. இந்த வீட்டிற்கு முன்பு இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர். 

இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட இரண்டு பேரிடம் விசாரணை நடைபெற்றது. அதே சமயத்தில் சல்மான் கானுக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அளிக்க காவல்துறை தரப்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actor SalmanKhan Death Threatening


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->