இந்து முறைப்படி சித்தார்த் - அதிதி ராவ் திருமணம்! பெரியாரை ஓரங்கட்டிய சித்தார்த்! - Seithipunal
Seithipunal


நடிகர் சித்தார்த் இயக்குநர் மணிரத்தினத்தின் ஆயுத எழுத்து படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி பின்னர் ஷங்கர் இயக்கத்தில் 'பாய்ஸ்' படத்தில் கதாநாயகனாக நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமடைந்தவர்.

தற்போது தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் சீரும் பாம்பாக இருந்த சித்தார்த் தற்போது திமுக ஆட்சியில் நடைபெறும் அநீதிகளை கண்டும் காணாதபோல பொட்டி பாம்பாக அடங்கிவிட்டார்.

இதனையும் படிங்க : https://www.seithipunal.com/cinema/janimaster-ranjithame-choreographer

சமூகவலைத்தளங்கில் அக்கிடீவ்வா இருந்த காலகட்டத்தில் தன்னை பெரியாரிஸ்ட்டாக காட்டிக்கொண்ட சித்தார்த் பெரியார் சிந்தனைகளை பற்றி பேசிவந்தார்..அடிக்கடி ட்விட்டரில் கருத்துச்சொல்லி திட்டு வாங்கிக்கொண்டிருந்த சித்தார்த் திமுகஆட்சியில் ஸ்டைலேண்ட் ஆகிவிட்டார் என அரசியல் விமர்சகர்கள் பலரும் கருத்து தெரிவித்தனர்.

இந்த நிலையில் நடிகர் சித்தார்த்தும், நடிகை அதிதி ராவ் ஹைதாரியும் காதலில் இருப்பதாக செய்திகள் சமூகவலைதளங்களில் காட்டு தீயாக பரவியது . கிசுகிசுவை உறுதிப்படுத்தும் விதமாக இருவரும் இணைந்து பொது இடங்களில் உலா வரும் புகைப்படங்களும் வெளியாகி வைரல் ஆனது.

இதனையும் படிங்க : https://www.seithipunal.com/india/high-court-judgement-drama-lovers

அதனை தொடர்ந்து அவர்களுக்கு இரு குடும்பத்தார் முன்னிலையில் எளிய முறையில் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றதாகவும் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தனர். அதில் விரைவில் திருமணம் குறித்து வெளியிடுவோம் என்றும் கூறி இருந்தனர்.

இந்தநிலையில் இன்று நடிகர் சித்தார்த்தும், நடிகை அதிதி ராவ் ஹைதாரியும் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள 400 ஆண்டுகள் பழமையான ஸ்ரீரங்கநாயக சுவாமி கோவிலில் திருமணம் செய்துகொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிந்துள்ளனர். சித்தார்த்-அதிதி தம்பதிக்கு ரசிகர்களும், திரைத்துறையினரும் வாழ்த்துக்களை சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actor Siddharth Actress Aditi Rao wedding


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->