கை, கால் செயலிழப்பு: பிரபல நடிகருக்கு உதவி கரம் நீட்டிய சிம்பு! ரசிகர்கள் பாராட்டு.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் துணை நகைச்சுவை நடிகர்களில் பிரபலமானவர் நடிகர் வெங்கல் ராவ். இவர் நடிகர் வடிவேலுவுடன் இணைந்து பல்வேறு திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். 

சீனா தானா, கந்தசாமி, தலைநகரம் உள்ளிட்ட படங்களில் இவர் நடித்த நகைச்சுவை காட்சிகள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 

இதனை தொடர்ந்து வடிவேலுவின் சினிமா வாழ்வில் ஏற்பட்ட தடை காரணமாக வெங்கல் ராவுக்கும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதற்கு இடையே வெங்கல் ராவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு கை, கால் செயலிழந்துள்ளது. 

இதற்காக நடிகர் வெங்கால்ராவ் பலரிடமும் சிகிச்சைக்காக உதவி கேட்டு வருகின்றார். இந்நிலையில் வெங்கல் ராவின் நிலைமையை அறிந்த நடிகர் சிம்பு அவரது மருத்துவ உதவிக்காக ரூ. 2 லட்சம் வழங்கியுள்ளார். 

உதவியைப் பெற்றுக் கொண்ட நடிகர் வெங்கால் சிம்புவுக்கு நன்றி தெரிவித்துள்ளார். கை, கால் செயலிழந்த நடிகருக்கு சிம்பு உதவி செய்துள்ளதை தொடர்ந்து ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor Simbu helped Vengal Rao


கருத்துக் கணிப்பு

இவற்றில் எந்த இரு அணிகள் இறுதிப் போட்டியில் மோதும் ?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவற்றில் எந்த இரு அணிகள் இறுதிப் போட்டியில் மோதும் ?




Seithipunal
--> -->